முத்திரை கட்டண சட்டத்தை முறைப்படுத்த தமிழக அரசின் புதிய சட்டம்
சொத்து மாற்று முறையின்போது வரி ஏய்ப்புகளை தவிர்க்க தமிழக அரசாங்கம் முத்திரை சட்டம் மற்றும் ஆவண பதிவு சட்ட்த்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இந்திய முத்திரை வரி (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 2012, சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் 1 சதவிகித முத்திரை கட்டணம் பங்கு பிரிக்கப்படாத நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கான கட்டுமான கட்டுமாண ஒப்பந்தங்களுக்கு வசூலிக்க வழிவகை செய்யப்படும். மேலும் பதிவுக் கட்டண சட்டமும் திருத்தப்பட்டு அவ்வாறான ஒப்பந்தங்களுக்கு பதிவு கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக அதன் உரிமையாளர்களிடம் அந்த நிலத்தை வாங்கவோ அல்லது அவர்களிடம் கூட்டு ஒப்பந்தம் (Joint Venture Agreements) செய்வதோ நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நிறுவனங்கள், அங்கு கட்டப்படும் வீடுகளை வாங்க முன் வருபவர்களிடமும் ஒரு ஒப்பந்த்தை செய்துக் கொள்வது வழக்கம். எனினும், அவ்வாறான ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட தேவை இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இதன் மூலம் அவ்வாறான கட்டுமாண நிலத்திற்கு அந்த நிறுவனங்கள் எவ்வித முத்திரை கட்டணமும் கட்டாமல் தவிர்த்து வருகின்றனர். இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட சட்ட திருத்தம் அவ்வாறான வரி ஏய்ப்பை தவிர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக முத்திரை வரி 6 % இருந்து வந்தது. இந்த முத்திரை வரி 2012, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 8 % ஆக உயர்த்தப்பட்டு (5 % முத்திரை வரி + 2 % மாற்று வரி + 1 சதவிகித பதிவு கட்டணம்) வசூலிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் மாநில அரசாங்கம் இழந்து வந்த 600 கோடி (ஒரு வருடம்) தவிர்க்கப் படும் என்று முத்திரை மற்றும் பதிவுக்கான கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது.
image source: http://www.hindu.com/pp/2008/11/02/stories/2008110250010100.htmஇதற்கு முன்பாக முத்திரை வரி 6 % இருந்து வந்தது. இந்த முத்திரை வரி 2012, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 8 % ஆக உயர்த்தப்பட்டு (5 % முத்திரை வரி + 2 % மாற்று வரி + 1 சதவிகித பதிவு கட்டணம்) வசூலிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் மாநில அரசாங்கம் இழந்து வந்த 600 கோடி (ஒரு வருடம்) தவிர்க்கப் படும் என்று முத்திரை மற்றும் பதிவுக்கான கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது.













Post a Comment