Tuesday 22 May 2012

பணி மூப்புத்தொகை (Gratuity) தொடர்பான ஆலோசனை

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடங்கள் மற்றும் 9 மாதம் (நீண்ட கால விடுப்பு இல்லாமல்) பணிபுரிந்தேன். தற்சமயம் நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டேன். எனக்கு gratuity கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? (சரவணன், திருச்சி)


நிச்சயமாக. உங்கள் கேள்விக்கான பதில் சுரேந்திர குமார் வர்மா (எதிர்) தொழிற்சங்க தீர்ப்பாயம் [(1980) (4) S.C.C. 433)] என்ற வழக்கில் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் “ஒரு தொழிலாளி தன்னுடைய பணிக்காலத்தில் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி இருந்தால் அது ஒரு முழு வருடமாக கணக்கெடுத்துக் கொள்ளப்படும், அவர் ஒரு முழு வருடம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட தீர்ப்பு தொழிற்தகராறு சம்பந்தமான வழக்கு தொடர்பானது என்றாலும், இது பணி மூப்புத்தொகை சட்டம் (Payment of Gratuity Act) தொடர்பான வழக்குகளுக்கும் பொருந்தும். நீங்கள் பணிமூப்பு தொகை (Gratuity) பெற தகுதியானவர்தான்.

Read more...

Monday 21 May 2012

முத்திரை கட்டண சட்டத்தை முறைப்படுத்த தமிழக அரசின் புதிய சட்டம்


சொத்து மாற்று முறையின்போது வரி ஏய்ப்புகளை தவிர்க்க தமிழக அரசாங்கம் முத்திரை சட்டம் மற்றும் ஆவண பதிவு சட்ட்த்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இந்திய முத்திரை வரி (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 2012, சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் 1 சதவிகித முத்திரை கட்டணம் பங்கு பிரிக்கப்படாத நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கான கட்டுமான கட்டுமாண ஒப்பந்தங்களுக்கு வசூலிக்க வழிவகை செய்யப்படும். மேலும் பதிவுக் கட்டண சட்டமும் திருத்தப்பட்டு அவ்வாறான ஒப்பந்தங்களுக்கு பதிவு கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக அதன் உரிமையாளர்களிடம் அந்த நிலத்தை வாங்கவோ அல்லது அவர்களிடம் கூட்டு ஒப்பந்தம் (Joint Venture Agreements) செய்வதோ நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நிறுவனங்கள், அங்கு கட்டப்படும் வீடுகளை வாங்க முன் வருபவர்களிடமும் ஒரு ஒப்பந்த்தை செய்துக் கொள்வது வழக்கம். எனினும், அவ்வாறான ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட தேவை இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இதன் மூலம் அவ்வாறான கட்டுமாண நிலத்திற்கு அந்த நிறுவனங்கள் எவ்வித முத்திரை கட்டணமும் கட்டாமல் தவிர்த்து வருகின்றனர். இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட சட்ட திருத்தம் அவ்வாறான வரி ஏய்ப்பை தவிர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்பாக முத்திரை வரி 6 % இருந்து வந்தது. இந்த முத்திரை வரி 2012, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 8 % ஆக உயர்த்தப்பட்டு  (5 % முத்திரை வரி + 2 % மாற்று வரி + 1 சதவிகித பதிவு கட்டணம்) வசூலிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் மாநில அரசாங்கம் இழந்து வந்த 600 கோடி (ஒரு வருடம்) தவிர்க்கப் படும் என்று முத்திரை மற்றும் பதிவுக்கான கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது. 
image source: http://www.hindu.com/pp/2008/11/02/stories/2008110250010100.htm

Read more...

சட்டம் எனப்படுவது யாதெனின்

”கடமைகளை” உணர்த்திக் கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் வாழ்வை நெறிமுறைப் படுத்துவதற்குப் பிறந்ததுதான் ”சட்டம்”

எது நீதி?

அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின் மறவாது இது கேள்; மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும், உடையும், உறையுளும், அல்லது கண்டது இல்

About Me

My Photo
Trademark Registration, Copyright Registration, Lawyers in Chennai
இந்த வலைதளம் இந்திய சட்டம் மற்றும் நீதி துறை தொடர்பான உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், சரியான வழிகாட்டுதலை உங்களுக்கு அளிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி. சட்டம் குறித்த உங்கள் சந்தேகங்களை advsuresh09@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
View my complete profile

Free Legal Advice © Layout By Hugo Meira.

TOPO